இப்பொழுது!
வணக்கம்!
நான்! இப்பதிவில் கூற விழைவது
யாதெனில், கடவுளைக் காண்பதற்காக, சத்யலோகம் சென்ற, என் பயண அனுபவத்தை,
ஒரு கட்டுரை
வடிவில் எழுதி, அதை
உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்!
முன்னுரை:
மகாஞானிகளும்! பேரறிஞர்களும்!
தங்களுடைய பார்வையில், இவ்வுலகம் எப்படி இருந்தது! எப்படி இருக்கிறது! எப்படி
இருக்க வேண்டும்! என்ற, தங்களுடைய அனுபவத்தை, அனுமானத்தை, விருப்பத்தை, தீர்க்க
தரிசனத்தை, இங்கு பதிவு செய்துவிட்டு, சென்றுள்ளனர்!
அதுபோல, ஒரு சாதாரண கூலிக்காரனுடைய பார்வையில், இவ்வுலகம்! எப்படி இருக்கிறது? இப்பிரபஞ்சம்! எப்படி இருக்கிறது?
அதுபோல, ஒரு சாதாரண கூலிக்காரனுடைய பார்வையில், இவ்வுலகம்! எப்படி இருக்கிறது? இப்பிரபஞ்சம்! எப்படி இருக்கிறது?
அவன்!
கடவுளை, எவ்வாறு காண்கிறான்? கடவுள்! தன்மையை, எவ்வாறு உணர்கின்றான்? என்பதை,
விளக்குவதாக இப்பதிவு அமைந்திருக்கும்!
இதன் மூலமாக, நான்!
யாருக்கும் எதையும் கற்றுத்தருவதோ, வழிகாட்டுவதோ மற்றும் இதன் மூலமாக, பணமோ! புகழோ!
சம்பாதிப்பது, எனது நோக்கமல்ல! என்னுடைய அனுபவத்தை, பதிவு செய்வதும்! அதை,
பகிர்ந்து கொள்வதுமே! எனது நோக்கமாகும்!
கடவுள்! இருக்கிறாரா?
இல்லையா? கடவுளை கண்டவர் உண்டா? இல்லையா? கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!
என்ற, பழமொழி! உண்மைதானா? அதாவது, கடவுளை கண்டவர், நான் கண்டேன்! என்று, சொல்லமாட்டாராம்!
கடவுளை காணாதவறோ, நான் கண்டேன்! என்று, சொல்லிக்கொள்வாராம்!
இந்த, கண்டவர்! விண்டவர்! என்ற, பழமொழி!
கடவுளைக் கண்டவர் கூறியதா? அல்லது கடவுளைக் காணாதவர் கூறியதா? பக்தப் பிரகலாதன்!
கடவுளை கண்டவரா? காணாதவரா? ராமகிருஷ்ண பரமஹம்சர்! கடவுளை கண்டவரா? காணாதவரா?
கடவுள்! இருக்கிறார் என்றால், நாட்டில் ஏன்
இவ்வளவு அநியாயம், அக்கிரமம், அநீதி நடக்கிறது? என்று, ஆயிரமாயிரம் கேள்விகள்! தொடர்ந்து
காலம் காலமாக, கேட்டுக்கொண்டே இருக்கின்றோம்!
உதாரணத்திற்கு,
சம்பந்தத்திற்கு 3 வயது
இருக்கும் போது, அவரை குளக்கரையில் இறக்கி விட்டுட்டு, அவர் அப்பா! குளிக்க போய்விட்டார். அங்கு, அழுது கொண்டிருந்த
சம்பந்தத்திற்கு, சிவனுடன் பார்வதி வந்து, முலைப்பால் கொடுத்ததால்,
ஞானம் பெற்ற சம்பந்தன், திருஞானசம்பந்தன்! என்றானார், என்கிறது
புராணாம்!
ஒரே ஒரு குழந்தை, பசியால் வாடியதை, பொறுக்க முடியாத கடவுள்! கும்பகோணத்தில், 94 பச்சிளம் பள்ளிக்
குழந்தைகள்! நெருப்பால் சுட்டெரிக்கும் போதும், அய்யோ அம்மா! எரியுதே!!
எரியுதே!!! என்று, மரண ஓலமிட்ட போதும், இயற்கை சீற்றங்களின் போதும், பாலியல் வன்கொடுமையின் போதும், கடவுள்! எங்கே போய், என்ன செய்து
கொண்டிருந்தார்? சம்பந்தன் பாடியது பொய்யா? சம்பந்தன்! பதிகம் பாடியது
உண்மையானால், அன்று வந்த கடவுள்! இன்று ஏன் வருவதில்லை? இப்படி பல ஆயிரம் கேள்விகள்!
கடவுள்! எங்கே இருக்கிறார்? கடவுளை எவ்வாறு புரிந்துகொள்வது?
ஸ்டீபன் ஹாகிங்! கோட்பாட்டை படித்து
விட்டு, “கடவுளே இல்லை” என்பதா? நம்ம ராமசாமி! கோட்பாட்டை படித்து
விட்டு, “கடவுள் இல்லை” என்பதா?
* விஞ்ஞானிகள்! ஒரேஒரு கோட்டை, வரைந்து வைத்திருக்கிறார்கள்!
பெருவெடிப்பு-----------------------------------இப்பொழுது-------------------------------------------------------
* மெய்ஞானிகள்! “முடிவிலி” கோட்டை வரைந்து வைத்திருக்கிறார்கள்!
ß------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இப்பொழுது-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------à
மனிதன்! தன்னால்,
எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பின்னோக்கி, முன்னோக்கிச் சிந்தித்துப்
பார்த்துக்கொண்டே இருக்கின்றான்!
* பிரபஞ்சம்! எப்படி தோன்றியது?
* பூமி! எப்படி தோன்றியது?
* உயிரினம்! எப்படி தோன்றியது?
* மனிதன்! எப்படி தோன்றினான்?
* எகிப்தியர்கள்! எப்படி பிரமீட் கட்டினார்கள்?
* தஞ்சாவூர் கோவில்! கோபுரத்தை, எப்படி கட்டினார்கள்?
இப்படி, மனிதனால்
கேள்விகள் கேட்காமலோ, கற்பனை செய்யாமலோ, தான் கற்பனை செய்ததை, கதையாக எழுதாமலோ,
இருக்கவே முடிவதில்லை! அது! பராசரர் ஆகட்டும், வியாசர் ஆகட்டும், சுகர் ஆகட்டும்,
வால்மிகியாகட்டும், புத்தராகட்டும், திருக்குறளை எழுதியவராகட்டும், கம்பராகட்டும்,
பாரதியாகட்டும், விவேகானந்தராகட்டும், நோஸ்ராடாமஸ் ஆகட்டும், ஸ்டீபன் ஹாகினாகட்டும்!
எல்லோரும் சமம்தான்!
அவரவர், தங்களுடைய கற்பனை
கதைகளை, இங்கு பதிவு செய்துவிட்டுச் செல்ல, பரிபூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது! அந்த
உரிமையின் அடிப்படையில், நான்! எழுதுகின்றேன்! எப்படி எழுதினாலும், எதிர்ப்பது
சிலர்! ஏற்பது சிலர்! அதையும் கடந்து, எக்காலத்திலும்! எவராலும்! எதிர்க்கவும்
முடியாத, ஏற்கவும் முடியாத, எதிர்த்து ஒரு கேள்வியையும் பதிவு செய்ய முடியாத, ஒரு
கற்பனைக் கதையை,
நான்! எழுத துணிகின்றேன்!
“இது! கடவுளின் அருளால்,
எழுதப்பட்டது! கடவுளின் கையிலிருக்கும் கருவியே, நான்! இதனால் கிடைக்கக்கூடிய,
புகழ் எனதல்ல! என்பதை, ஒப்புக்கொண்டு எழுத துவங்குவது, ஞானியின் அடையாளமாகும்”
என்பது, ஞானிகளின் வாக்கு!
அந்த ஞானிகளின் கற்பனை
கதைகளை, கொஞ்சம் மாறுபட்ட கண்ணோட்டத்திலும், எளிமைபடுத்தியும்
புரிந்துகொண்டிருக்கின்றேன்!
நானாக, எதையும் புதிதாக, கண்டுபிடித்திடவில்லை! ஆகவே,
இச்செயலால் கிடைக்கப்பெறும் புகழ்! அந்த ஞானிகளுக்கே!
ஆனால், என்னுடைய செயல்,
அந்த மகா ஞானிகளையோ, அவர்களுடைய கதைகளையோ, நான் பங்கப்படுத்துவதாக அமையப்பெற்றால்,
அதனால் ஏற்படக்கூடிய இழிவுகளையும், அதற்காக எனக்கு வழங்கப்படும் தண்டனைகளையும்,
நான்! தனித்து நின்று, துணிவோடும், பணிவோடும் ஏற்றுக்கொள்வேன்! என்பது, சத்யம்!
நான்! செய்து
கொண்டிருப்பது சரியா? தவறா? சிறியதா? பெரியதா? என்பதை விட, நான்! செயலாற்றிக்
கொண்டிருக்கின்றேன்! அவ்வளவுதான்!
பொருளுரை:
நம்முடைய, சிறு வயது
முதலே, பெரியோர்கள்! நமக்கு கற்றுத்தந்தது, “த்வைத்தம்” தான்! சாமியை விழுந்து கும்பிடு, சாமிக்கு உக்கி போடு, நீ பொய் சொன்னால், சாமி கண்ணை குத்தும், ஆண்டவன்! சொல்றான்,
அருணாச்சலம்! செய்யரான், கடவுள்! கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான், கடைசியில் கை உட்டுடுவான்! ஆண்டவன்! எல்லாவற்றையும் மேலிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆண்டவன்! படைத்தான், என்னிடம் கொடுத்தான், அனுபவி ராஜா என்று, என்னை அனுப்பி வைத்தான்!
இப்படியான வசனங்களை,
அனுதினமும் நாம்! கேட்டுக் கேட்டு வளர்ந்ததால், நம்மால்! “த்வைத்தத்திலிருந்து”
விடுபடவே முடிவதில்லை! கடவுள் வேறு! நாம் வேறு! அவர் எங்கோ இருக்கிறார்! நாம்
எங்கோ இருக்கிறோம்! என்ற, திடமான நம்பிக்கை, சிறுவயது முதலே, நம்மிடம் இருக்கிறது!
பின்பு, நாம்! வளர வளர,
படிப்பு, வேலை, கல்யாணம், பொண்டாட்டி, பிள்ளைகள், பிரச்சனை, துன்பம், தோல்வி,
அவமானம், ஏமாற்றம், கடன், கஷ்டம், நஷ்டம், வியாதி என்று, எல்லாவற்றையும்
அனுபவிக்கும் போது,
1) கடவுள்! மீதுள்ள நம்பிக்கை, குறையத்துவங்குகிறது. கடவுள்! மீதுள்ள
கோபம், வெறுப்பு, விரக்தியினால், அப்படியே சிலர்! “நாத்திக” பாதையில்,
சென்று விடுகின்ற நிலை!
2) கடவுள்! என்னை சோதிக்கிறார் என்றால், அது என் நன்மைக்கே!
நல்லவர்களுக்கு, கடவுள்! எதுவுமே கொடுக்க மாட்டார், ஆனால் கடைசியில் கை விடமாட்டார்! என்று, தன் வாழ்வில் ஆயிரம் துன்பங்கள்
அனுபவித்தாலும், கடவுள்! மீது, தனக்கு ஆயிரம் கோபம் இருந்தாலும்,
கடவுள்! நம்பிக்கையிலிருந்து, துளியும் விலகாத நிலை, “த்வைத்த” நிலை!
3) “த்வைத்தத்திலிருந்து” சற்று முன்னேறிய நிலைதான்,
“வசிஷ்டாத்வைதம்” நான் யார்? எதற்காக பிறந்தேன்? எதற்காக, இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றேன்?
என்று, ஆன்மாவைப் பற்றிய விசாரனையை துவங்கி, நான்! எனது கடமைகளை, விருப்பு வெறுப்பு இல்லாமல், கடவுளுக்காக
செய்கிறேன்! எல்லாம் கடவுளுக்கே அற்பணம் என்று, வாழத்துவங்கினால், நான்! பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு, பிறவா நிலை எய்துவேன்!
“காட்சிக்குட்பட்ட பேரண்டம்” என்பது,
கடவுளின் மொத்த சொத்தில்,
கால் பாகமே! மீதமுள்ள, முக்கால் பாகம் சத்யலோகம்! அங்குதான், கடவுள்!
அமர்ந்திருப்பார், நான் அங்கு செல்வேன், கடவுள்! என்னை, அவர் மடியில் அமரச் செய்து, என் தலையை வருடிக்கொடுப்பார், பின்பு, நான்! கடவுளின்
அடுத்த நிலையில், எப்போதும் அங்கேயே இருப்பேன், என்று புரிந்துகொள்வது
“வசிஷ்டாத்வைதம்”
இந்த 1) 2) 3)
நிலைகளையும், தன் வாயில் போட்டு, மென்று விழுங்கி, தண்ணீர் குடித்து, ஏப்பம் விட்ட
நிலைதான், “அத்வைதம்” இருப்பது ஒன்றே! அதுவே பிரம்மம்!
* கடவுள்! நாம ரூபமாக இருக்கின்றார்!
உதாரணத்திற்கு, என்
முன்பு, குடுவையில் நீர் இருக்கிறது, அதை நான்! வாயில் ஊற்றினால், எச்சிலாகிறது!
விழுங்கினால், ரத்தமாகிறது! கழித்தால், சிறுநீராகிறது! பின்பு, அதுவே
சாக்கடையாகிறது! ஆறாகிறது! கடலாகிறது! ஆவியாகிறது! மேகமாகிறது! மழையாகிறது! அது!
மீண்டும் என் முன்பு, குடுவையில் நீராகிறது!
தேன்கனியில், சாறாகி! பூக்களிலே, தேனாகி! பசுவினிலே, பாலாகும் நீரே!
(ரிதம் பட பாடல்)
ஒரு துளி நீரை எடுத்து,
சூடான தோசைக் கல்லில் விட்டால்,
ஒரு வினாடிக்குள்ளாக, அது! பல நூறாக சிதறி, ஆவியாகிறது! ஆனால்,
அந்த ஒரு துளி நீர்! அழிந்ததா? ஒரு துளி நீரின் வடிவம் அழிந்தது!
ஆனால், நீர் அழியவில்லை! நீர்! ஆவியாகி, அடுத்த நிலையை எய்தது!
அது! ஆவியாக சில காலம்! மேகமாக சில காலம்! மழையாக சில காலம்! என்று, நீர்!
அடுத்தடுத்த நிலைகளை, தொடர்ந்து அடைந்து கொண்டேயிருக்கும்!
நீருக்கு மரணம் உண்டா? அழிவு
உண்டா? இங்கு எப்போதாவது,
நீர்! குறைந்து போகுமா? நிறைந்து போகுமா? அதுபோல,
ஆன்மா!
அழிவில்லாதது! அது! பிறந்தால் தானே, இறப்பதற்கு!
ஆன்மா நித்யமானது!
நான்! என்னை,
சிவக்குமார் என்ற, ரூபமாக நினைத்துக் கொண்டால், எனக்கு மரணம் நிச்சயமாகிறது! நான்!
இறந்த பிறகு, அடுத்த ரூபம் எடுக்கிறேன்! அல்லது அடுத்த பிறவி எடுக்கிறேன்! நான்!
என்னை, ஆன்மாவாக நினைத்துக் கொண்டால், எனக்கு அழிவே கிடையாது! நான் நித்யமாகிறேன்!
எப்படி நீர்! பல இலட்ச
வடிவ பெயர்களுடன், உலாவிக் கொண்டிருக்கிறதோ! அதுபோல, நம் உணர்வுகளால் உணர முடிந்த
மற்றும் உணர முடியாதவையாவும், கடவுளின் நாம ரூபமாகவே இருக்கிறது! கடவுள்! நாம ரூபமாக இருக்கின்றார்! சரி! ஆனால்,
ஏன் அவ்வாறு இருக்கின்றார்?
அதாவது,
* கடவுள்! படைப்பின் நோக்கம் என்ன?
* கடவுள்! எப்பொழுது படைத்தார்?
* கடவுள்! எப்படி படைத்தார்?
கடவுள்! காரண
காரியங்களுக்கு அப்பார்ப்பட்டவர்! நான்! கடவுளை அறிந்துகொள்ளவே முடியாது! என்பதை
அறிந்துகொண்டேன்! என்று, எத்தனையோ பேர்! இந்த இடத்தில் தான், சரணாகதி
அடைந்தார்கள்!
கடவுள்! தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், அவர் எங்கும்
நீக்கமற நிறைந்திருப்பார்! என்ற, பிரகலாதன்! கூறிய, மகா வாக்கியத்தை, சூத்திரமாக
பயன்படுத்தி, நான்! இக்கேள்விகளுக்கு பதில் கண்டு, சத்யலோகத்தில் பிரவேசித்தேன்! அங்கு, பிரம்மம்! எப்படி இருக்கின்றது என்றால்,
அது! தன்னைத்தானே, படைத்துக்கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, பாதுகாத்துக்கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, உணவாக்கிக் கொண்டிருக்கிறது!
அது! தனக்குத்தானே, பெயர் வைத்துக் கொண்டிருக்கிறது!
அது! தன் புகழை, தானே பாடிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, புணர்ந்து கொண்டிருக்கிறது!
அது! தன்னையே, தன் கர்ப்பத்தில், சுமந்து கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, ஈன்று கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, தான் யார் என்று, கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, அறிய முற்பட்டுக் கொண்டிருக்கிறது!
அது! தான் இருப்பதை, தானே அறிந்து கொண்டிருக்கிறது!
அது! தான் இருப்பதை, தானே அறிய மறுத்துக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, ஏமாற்றிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, துன்புறுத்திக் கொண்டிருக்கிறது!
அது! தன்னிடம், தானே அன்பு காட்டிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னிடம், தானே கோபம் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, பழிவாங்கிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைதானே, காதலித்துக் கொண்டிருக்கிறது!
அது! தன் காதலை, தானே நிராகரித்துக் கொண்டிருக்கிறது!
அது! தன்னிடம், தானே பேசிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, பல சாதிகளாக, மதங்களாக, நிறங்களாக,
குணங்களாக பாகுபடுத்திக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறது!
அது! தன்னிடம், தானே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது!
அது! தனக்குத்தானே, சுதந்திரம் வழங்கிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னிடம், தானே திருடிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, கொலை செய்து கொண்டிருக்கிறது!
அது! தனக்கு தானே, விதிகளை, சட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது!
அது! தன் விதிகளை, தானே மீறி நடந்து கொண்டிருக்கிறது!
அது! தனக்குதானே, தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைதானே, மன்னித்துக் கொண்டிருக்கிறது!
அது! தன்னிடம், தானே முரண்பட்டுக் கொண்டிருக்கிறது!
அது! தன் கதையை, தானே எழுதிக் கொண்டிருக்கிறது!
அது! தன் கதையை, தனக்கே அனுப்பிக்கொண்டிருகிறது!
அது! தன் கதையை, தானே படித்துக் கொண்டிருக்கிறது!
அது! தன் அனுபவத்தை, தன்னிடமே பகிர்ந்து கொண்டிருக்கிறது!
அது! பிரம்மம்! கடவுள்! ஆன்மா! நான்!
* ஏன் இந்த பிரம்மம் எல்லாமாக இறுக்கிறது? அதன் நோக்கம் என்ன?
நீங்கள்!
நாத்திகரானாலும், ஆத்திகரானாலும், பிரபஞ்சம் இயங்கிக் கொண்டேயிருக்கின்றது!
என்பதில், யாருக்காவது எந்தவொரு சந்தேகமாவது இருக்கிறதா? அது! தொடர் இயக்கத்தில் இருக்கின்றது! என்பது, எவ்வளவு சத்தியமோ!
அவ்வளவு சத்யம், அது! சமநிலையில் இருக்கின்றது என்பதும்!
நீங்கள்! உங்கள்
வாழ்வில், எதைச் செய்தாலும், செய்யாமல் போனாலும், எல்லாமே சமநிலைதான்! என்பதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல்
போவதும், எல்லாமே சமநிலைதான்!
* பிரம்மம்! தன்னை, இயக்கிக் கொள்வதற்காக, சமநிலையில் இருக்கின்றது!
* பிரம்மம்! தன்னை, சமநிலையில் வைத்துக் கொள்வதற்காக, இயங்குகின்றது!
* பிரம்மம்! தன்னை, இயக்கிக் கொள்வதற்காகவும், சமநிலையில் வைத்துக்
கொள்வதற்காகவும், அது! எல்லாமாக இருக்கின்றது! இதுவே படைப்பின் நோக்கமாகும்!
அது! தன்னைத்தானே, சமநிலையில் வைத்துக் கொண்டிருக்கிறது!
அது! தான், சமநிலையில் இல்லை என்று, நினைத்துக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, சமநிலையில் வைத்துக்கொள்ள, போராடிக்
கொண்டிருகிறது!
* வேத மந்திரங்களும், கெட்ட வார்த்தைகளும் பிரம்மமே!
* தெளிந்த நீரோடையும், தேங்கிய சாக்கடையும் பிரம்மமே!
* சத்சங்கமும், சாராய கடையும் பிரம்மமே!
* பாவமும், புண்ணியமும் பிரம்மமே!
* சந்தேகங்கள் நிறைந்த குழப்பமும், கேள்விகள் அற்ற ஞான நிலையும் பிரம்மமே!
அடுத்த கேள்வி, கடவுள்! எப்போது படைத்தார்?
பிரம்மத்திற்கு கடந்தகாலம்,
எதிர்காலம், என்பது எல்லாமே, நிகழ்காலம்தான்! நீங்கள்! காலச் சக்கர இயந்திரத்தை கண்டுபிடித்து,
அதில் பயணித்து, கடந்த காலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ, சென்று
பார்க்க முடிந்தால், அப்பொழுதும் பிரம்மம்! படைத்துக்கொண்டுதான் இருக்கும்! எப்பொழுது படைத்தார்? என்ற கேள்வி, கடந்தகாலத்தை குறிக்கிறது!
* பிரம்மம்! படைப்பின்,
துவங்க நிலையிலும் இல்லை!
* பிரம்மம்! படைத்து முடித்துவிட்டு, பாம்பின் மீது படுத்துக்கொண்டு,
எல்லாவற்றையும் சாட்சி மாத்திரமாக, பார்த்துக் கொண்டிருக்கும்
நிலையிலும் இல்லை!
* பிரம்மம்! தன்னை, படைத்துக் கொண்டேயிருக்கும் நிலையில் இருக்கின்றது!
* பிரம்மம்! இப்பொழுதுதாகவே, இருந்து கொண்டிருக்கின்றது!
அடுத்த கேள்வி, கடவுள் எப்படி படைத்தார்?
* பிரம்மம்! தான், அல்லாதவற்றைக் கொண்டு படைத்தால்தான், அது! எப்படி படைத்தது என்பதற்கு, பதில் எழுத முடியும்!
* படைக்கப்பட்டவை யாவும் என்று எழுதினால், அது கடந்த காலத்தை குறிக்கும்!
அதனால்,
* படைக்கப்பட்டுக் கொண்டிருப்பவை யாவும், பிரம்மம்தான்!
* படைப்பின் நோக்கம்! யாவும், பிரம்மம்தான்!
* படைத்துக் கொண்டேயிருப்பதும், பிரம்மம்தான்!
* இயக்கமும் பிரம்மம்தான்!
* சமநிலையும் பிரம்மம்தான்! என்பதை, புரிந்துகொள்வதும்,
புரியமறுப்பதும், புரியாமல் தவிப்பதும், பிரம்மம்தான்!
இப்பொழுது! உங்களால்!
என்னை எதிர்த்து, ஒரே ஒரு கேள்வியாவது, கேட்க முடியுமா? நீங்கள்! மத்வராக,
வசிஷ்டராக, வியாசராக, ஆதிசங்கரராக, இராமானுஜராக, விவேகனந்தராக, பாரதியாக,
பெரியாராக, ஐயன்ஸ்டீனாக, நியூடனாக, டார்வினாக, ஹாகினாக, இருங்க!
அவர்களுடைய சிஷ்ய/பக்த/மாணவ கோடிகளாக இருங்க!
* நீங்கள்! எதை, எதிர்த்து கேள்வி கேட்பீர்கள்? பிரம்மத்தைதான்!
* நீங்கள்! எதை, வெற்றி கொள்வீர்கள்? பிரம்மத்தைதான்!
* நீங்கள்! எதனிடம், தோற்றுப்போவீர்கள்? பிரம்மத்திடம்தான்!
* நீங்கள்! யார்? பிரம்மம்தான்!
* நான்! யார்? பிரம்மம்தான்!
இருப்பது ஒன்றே! என்பது,
பிரம்மத்திற்கு தெரியும்! இருப்பினும்,
அது! தன்னைத்தானே, எதிர்த்துக் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னிடம், தானே சவால் விட்டுக் கொண்டிருக்கிறது!
அது! தன்னிடம், தானே தோல்வியுற்றுக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே வீழ்த்தி, வெற்றி பெற்றுக் கொண்டிருகிறது!
இதை, நான்! ஏற்க
மாட்டேன்! அந்த கடவுளே! வந்து சொன்னாலும்,
நான்! நம்ப மாட்டேன்! மகாஞானிகள்! அவ்வாறு கூறவில்லை! நீ! உன்
சொந்த கதையை, மிகைப்படுத்திக் கூறிக் கொண்டிருக்கிறாய்!
எங்கிறீர்களா?
* மெய்யுணர்வே, பிரம்மம்!
* நான்! பிரம்மமாக, இருக்கிறேன்!
* அதுவாகவே, நீ! இருக்கிறாய்!
* இந்த ஆன்மா, பிரம்மமே!
என்ற, மகா வாக்கியங்களை!
கூறியதும், பிரம்மம்தான்!
* அதை, நான்! இவ்வாறாக புரிந்து கொண்டிருக்கின்றேன்! என்பதும்,
பிரம்மம்தான்!
* அதை, நீங்கள்! வேறொன்றாக புரிந்து கொண்டால், அதுவும் பிரம்மம்தான்!
* இதை, ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்! எனக்கென்று ஒரு தனி கொள்கையை
வகுத்துக் கொண்டு, அதையேதான் நான்! பின் பற்றுவேன்! என்று, நீங்கள்! கூறினால், அதுவும்
பிரம்மம்தான்!
அது! தன்னைத்தானே, ஏற்க மறுத்துக் கொண்டிருக்கிறது!
அது! தனக்கென்று, ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கிறது!
அது! தான், வகுத்த கொள்கையைதான், பின்பற்றுவேன் என்று,
அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது!
அது! ஏன் அவ்வாறு, செய்து கொண்டிருக்கிறது?
* பிரம்மம்! தன்னை இயக்கிக் கொள்வதற்காக, தன்னை சமநிலையில் வைத்துக்
கொள்வதற்காக, அது! எல்லாமுமாக இருந்து கொண்டு, எல்லாவற்றையும் செய்து
கொண்டிருக்கிறது!
நீங்கள்! என்னை
பாராட்டினால், தூற்றினால், எனக்கு தண்டனை வழங்கினால்,
அது! தன்னைத்தானே, பாராட்டிக் கொண்டிருக்கிறது!
அது! தன்னைத்தானே, தூற்றிக் கொண்டிருக்கிறது!
அது! தனக்குத்தானே, தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது!
என்று, எழுதுவேன்!
ஏ! இப்போ என்ன செய்வீங்க!
ஏ! இப்போ என்ன செய்வீங்க! என்று,
பிரம்மம்! ஆடிப்பாடிக் கொண்டிகிறது!
அது! ஆ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்கிறது!
அது! ஊ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்கிறது!
அது! ஐயோ!!!!!!!!!!!!!!!!!! என்கிறது!
அது! தாங்க முடியலடா சாமி என்கிறது!
அது! தன் தலையை, சொரிந்து கொண்டிருக்கிறது!
அது! சிரித்துக் கொண்டிருக்கிறது!
அது! அழுது கொண்டிருகிறது!
அது! அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமல்,
தன் வாயை பொத்திக் கொண்டிருக்கிறது!
அது! தன்னையே, பிரம்பிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது!
முடிவுரை:
நான்! சத்யமாக,
சத்யலோகம் செல்லவில்லை! எனக்குள் எழுந்த, கேள்விகள் யாவும் தீர்ந்தபோது, நான்!
நின்று கொண்டிருந்த இடமே, சத்யலோகமாக மாறிப்போனது! எதைக் கண்டாலும், அதில் நானே
தெரிகின்றேன்! எல்லாமுமாக, எப்போதுமாக, நான்! இருக்கின்றேன்! என்ற, பிரம்மஞான அனுபவத்தை, பெற்றுக் கொண்டிருக்கின்றேன்!
நான்! யாரை எதுவென்று கூறுகின்றேனோ, அதுவாகவே நான் ஆகின்றேன்! "அஹம் பிரம்மாஸ்மி"
நன்றி…..
தாயே பராசக்தி! 2013 www.ramukavis1983.blogspot.in
லூசாப்பா, நீ? 2017 www.lusappani.blogspot.in
இப்பொழுது! 2020 www.eppoluthu.blogspot.in
ப. சிவக்குமார்
what's app +91 9790600183
ramukavis1983@gmail.com
137, குப்புசாமி நகர்,
சின்னவேடம்பட்டி,
கோயமுத்தூர் – 641049.